கொரோனா நோயாளிகளுக்கு உதவும் 9 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா..!
புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம்,நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் நெருக்கடிக்கு உதவுவதற்காக தனது சொந்த சேமிப்பிலிருந்து ஆக்ஸிஜன் தரும் மெஷின்களை வாங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.
“இந்தியாவின் கிரெட்டா” என்று செல்லமாக அழைக்கப்படும் மணிப்பூரைச் சேர்ந்த 9 வயதான லிசிபிரியா கங்குஜாம்,பெரும்பாலும் காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி குரல் எழுப்பி வருபவர்.மேலும் இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்துரைப்பவர்.
இதனைத் தொடர்ந்து லிசிபிரியா கங்குஜாம்,விருதுகள் மூலம் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை சேமித்து வைத்த பணத்தில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தரும் மெஷின்களை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து லிசிபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”அடுத்த சில நாட்களில் 5 லிட்டர் அளவிலான பத்து ஆக்ஸிஜன் செறிவூட்டும் மெஷின்கள் இந்தியாவிற்கு வரும்,இந்த ஒரு ஆக்சிஜன் தரும் மெஷினின் விலையானது ரூ.50,000 ஆகும்.இதைப்போன்று,மொத்தம் 100 மெஷின்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன”,என்று கூறினார்.மேலும்,ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான உயிர்களை நம்மால் முடிந்த உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்றும் லிசிபிரியா கேட்டுக்கொண்டார்.