லடாக் விபத்தில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..! ராணுவ தளபதி மனோஜ் பாண்டே இரங்கல்.!
லடாக்கின் லே மாவட்டத்தில் கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 9 வீர்ரகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறனர். அதன்படி, தற்பொழுது மறைந்த ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் “ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்து தரப்புகளும் லடாக்கில் நடந்த ஒரு சோகமான மற்றும் துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் ஒன்பது துணிச்சலான இதயங்களை இழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றன. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.