ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்கள்.! பிரதமர் மோடி உத்தரவு.!

- டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
- அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தாமதமான 9 திட்டங்களை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்கள் தாமதமானது குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் ரயில்வே, சாலை போக்குவரத்து, பெட்ரோலியம் ஆகிய துறைகளில், தாமதமான 9 திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடந்த முறை நடைபெற்ற பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 269 திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்திருந்தார். மேலும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழுவான பிரகதி – இது மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025