கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா ,கர்நாடக , குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.கேரளா மாநிலத்திலும் கன மழை பெய்து வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பல பள்ளி , கல்லுரிகளுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள பிரமானல் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது.வெள்ளத்தில் மீட்பதற்காக பஞ்சாயத்து படகு ஓன்று உள்ளது.
இப்படகில் இரண்டு முறை அக்கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வந்தனர்.ஆனால் 20 பேர் செல்லக்கூடிய அப்படகில் மூன்றாவது முறையாக 30 பேர் சென்றனர்.இதனால் திடீர்ரென படகு கவிழ்ந்தது.
இதில் 7 பெண்கள் உட்பட 9 பேர் இறந்தனர்.மேலும் 16 பேர் காணவில்லை மற்றவர்கள் பத்திரமாக நீந்தி வந்து உள்ளனர்.இதை தொடர்ந்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த மீட்பு குழுவினர் 20 படகு மூலம் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…