சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 9 நீதிபதிகள் நியமனம்..!
கொலீஜியம் பரிந்துரைத்த 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உச்சநீதிமன்த்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ள நிலையில், தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட கொலீஜியம் அமைப்பானது 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரின் பெயர்களை பரிந்துரைத்தது.
இந்நிலையில், கொலீஜியம் பரிந்துரைத்த 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும், தொடர்ந்து இந்த பட்டியல் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.