9 பேரை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து வாரங்கல் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோரிக்குண்டா கிராமத்தில் அமைந்துள்ள சணல் தொழிற்சாலையில் இருக்கும் கிணற்றில் 9 பேரின் சடலம், கடந்த மே மாதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த கொலைகளை செய்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சஞ்சய் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. விசாரியின்போது, தன்னுடன் பழகிய ரபிகா என்ற பெண்ணை கொலை செய்த்தாகவும், அதனை மறைக்க அவரின் குடும்பத்தினர் 6 பேர் மற்றும் தன்னுடன் பணியாற்றிய பீகாரை சேர்ந்த இளைஞர்கள் 3 பேரை கொலை செய்து, கிணற்றில் வீசியது, போலீசாருக்கு தெரியவந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வாரங்கல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது 9 பேரை கொலை செய்ததற்காக சஞ்சய் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…