ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணையுங்கள் -பிரதமர் மோடி .!
பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று அவர், நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.
அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள் பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம்.
மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி என பிரதமர் மோடி கூறினார்.
இதையெடுத்து வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி (அதாவது ஞாயிற்றுகிழமை) இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.