9 லட்சம் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக இன்றும் ஸ்டிரைக்..!
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தில் ஈடுபடவுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்தது. அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தில் ஈடுபடவுள்ளனர். நாடு முழுவதும் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் நாட்டில் 90 ஆயிரம் வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்கள் அமைப்பின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாடு முழுவதும் நேற்று 18,000 கோடி மதிப்பிலான காசோலைகள் பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவையும் முடங்கியது.