கேரளாவில் ஜீப் கவிழ்த்து விபத்து – 9 பேர் பலி!
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மானந்தவாடியில் 25 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
தலப்புழா, கண்ணோத் மலை அருகே உள்ள தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தின் போது ஓட்டுனர் உட்பட மொத்தம் 13 பேர் ஜீப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போத, காயமடைந்தவர்கள் வயநாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.