ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி.! பிரதமர் மோடி இரங்கல்.!
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் எல் ஷர்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. குறைந்தது 17 பேர் ஆலைக்குள் இருந்தனர். பின்னர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களும் மீட்புப் பணிகளில் சேர்ந்துள்ளதாகவும், ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதையில் இருந்து இன்னும் புகை வெளியே வருகிறது, அதன் தீவிரத்தை குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தெலுங்கானா-ஆந்திர மாநில எல்லையில் நிலத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் இடது கரை நீர்மின் நிலையத்தில் 9 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீ அணைக்கப்பட்டாலும், புகை காரணமாக மின் நிலையம் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் மூழ்கி, மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது. இதனால் 6 பேர் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன்தான் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
Fire at the Srisailam hydroelectric plant is deeply unfortunate. My thoughts are with the bereaved families. I hope those injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) August 21, 2020