உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மற்றும் பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் பேருந்து ஓன்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லியில் இருந்து லக்னோ வழியாக உ.பி.யின் பஹ்ரைச் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. பேருந்து மற்றும் லாரி இரண்டும் மிக அதிக வேகத்தில் வந்ததால் மிகபெரிய விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தித்திற்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்தவர்களை மாநில தலைநகர் லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மற்றவர்கள் பாராபங்கி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமம், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…