மத்திய அரசு அலுவலகங்களில் 9.79 லட்சம் காலிப் பணியிடங்கள்- மத்திய அமைச்சர்

Default Image

மத்திய அரசு அலுவலகங்களில் 9.79 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2022 நிலவரப்படி மத்திய அரசு அலுவலகங்களில் பல்வேறு பதவிகள் மற்றும் துறைகளுக்கு 9,79,327 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் லோக் சபையில் தெரிவித்தார்.

இதில் 23,584 குரூப் ஏ பதவிகள், 1,18,807 குரூப் பி பதவிகள் மற்றும் 8,36,936 குரூப் சி பதவிகள் காலியாக இருக்கின்றன. ரயில்வே துறையில் 2,93,943 மற்றும் பாதுகாப்பு (சிவில்) துறையில் 2,64,704 மற்றும் உள்துறை விவகாரங்களில் 1,43,536 காலியிடங்களும் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் எம்பி தீபக் பைஜ் கேட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்து கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் அலுவலகத்தில் (PMO) அனுமதிக்கப்பட்ட 446 பதவிகளுக்கு 129 காலிப் பணியிடங்களும், குடியரசுத் தலைவர் செயலகத்தில் அனுமதிக்கப்பட்ட 380 பதவிகளுக்கு 91 காலிப்பணியிடங்களும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அக்டோபரில், அரசாங்கத்தால் புதிதாக 75,000 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள், நவம்பரில் 71,000 பேர் என புதிய பணியாளர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சேர இருக்கிறார்கள். நியமனம் பெற்றவர்கள் காலியாக உள்ள குரூப் சி மற்றும் டி பதவிகளில் சேருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள குரூப் பி மற்றும் சி பதவிகளில், கிட்டத்தட்ட 98% காலியிடங்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 1 மில்லியன் மக்களை  பணியமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்