இன்று செப்டம்பர் 11 அதாவது 9/11! உலக வரலாற்றில் மனிதகுலத்தை தாக்கியதாக அறியப்பட்ட ஒரு தேதி,மனிதகுலத்திற்கான மதிப்புகள் மூலமே இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க முடியும் -பிரதமர் மோடி
கொடூரமான 9/11 இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.இந்த தாக்குதல் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது மனிதநேயத்தின் மீதான தாக்குதல் என்றும்,மனிதகுலத்திற்கான மதிப்புகளை புகுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற துயரங்களை தவிர்க்க முடியும் என்றார்.
“இந்த நாளில்,ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, செப்டம்பர் 11, 1893 அன்று, சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக மத பாராளுமன்றத்தின் உலகளாவிய மேடையில் இந்தியாவின் நற்குணங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்,என்று பிரதமர் மோடி கூறினார்.
மனிதகுலத்தின் இந்த மதிப்புகள் மூலம் மட்டுமே 9/11 போன்ற சோகங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நாளில் மொத்தமாக 2,977 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். செப்டம்பர் 11, 2001 அன்று, அமெரிக்கா அதன் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது.
பயங்கரவாத தாக்குதல்களில் 3,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வெறும் 102 நிமிட இடைவெளியில், நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா இயக்கத்தால் கடத்தப்பட்ட விமானங்களால் தகர்க்கப்பட்டது.
சென்னை : தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் சற்று…
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…