9 ஆயிரம் கோடியை சந்திக்கவில்லை..! தவிக்கும் மத்திய அமைச்சர்…!!

Default Image

நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று  விஜய் மல்லையா தெரிவித்த நிலையில் இதற்கு நிதியமைச்சர் இது குறித்து கூறியுள்ளார்.2014 ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய் மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Related image

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Related image

இதன்படி சிறையில் உள்ள வசதிகள் குறித்த வீடியோ காட்சிகள் புதனன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.மேலும் தான் கடைசியாக நிதியமைச்சரை சந்தித்தேன் என்று கூறிய மல்லையா அதனை மறுக்கும் அருண்ஜேட்லி என மர்மாக இந்த 9 ஆயிரம் கோடி உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்