ஜிஸ்டி இழப்பீட்டிற்காக தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு எட்டாவது வாரத் தவணையாக ரூ 6,000 கோடியை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதில் ரூ. 5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், டெல்லி , ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை செயல்பாடுகளின் மூலமான வருவாயில் இடைவெளி இல்லை.
4.1902 சதவீத வட்டிக்கு இந்த வாரத்திற்கான கடன் தொகையை மத்திய அரசு பெற்றுள்ளது. இதுவரை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் ரூ 48,000 கோடி, 4.6986% வட்டியில் பெறப்பட்டுள்ளது.ஏற்கனவே ரூ.1,06,830 கோடியை, மாநிலங்கள் கூடுதலாக பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள கடன் தொகையின்படி தமிழகத்திற்கு ரூ.3191.24 கோடி, சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ. 9,627 கோடியை (0.50%) கூடுதலாக மாநிலம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…