கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் 10 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் பெங்களூரை சார்ந்தவர்கள் , கலாபுராகி இரண்டு பேர் சார்ந்தவர்கள் மேலும் கலபுராகி சார்ந்த ஒருவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 நபர் கொரோனாவால் பாதிப்பதற்கு முன் எங்கு சென்றார்என்ற விபரம் வெளியாகி உள்ளது. அவர் மார்ச் 6 ஆம் தேதி, நோயாளி அமெரிக்கன் ஏர்வேஸால் சான் அன்டோனியோவிலிருந்து டல்லாஸுக்கு பயணம் செய்தார். மார்ச் 7 ஆம் தேதி, டல்லாஸிலிருந்து அமெரிக்கன் ஏர்வேஸ் வழியாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் சென்றார்.
ஹீத்ரோவிலிருந்து, மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு பெங்களூருவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியது.மார்ச் 9 ஆம் தேதி, அவர் ஒரு டென்னிஸ் கோர்ட்டுக்குச் சென்று ஒரு நபருடன் விளையாடினார். பின்னர் மீண்டும் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் அதே டென்னிஸ் கோர்ட்டுக்கு விளையாடி உள்ளார்.
மார்ச் 10 தேதி இரவு 10 மணிக்கு அவர் தனது காரில் சென்று தனது இரண்டு நண்பர்களை சந்தித்தார். பின்னர் அவர் தனது மனைவியுடன் மடிவாலாவில் சந்தியா தியேட்டரில் ஒரு படம் பார்த்துள்ளார்.
மார்ச் 11 தேதி அவர் லேசான காய்ச்சல் ஏற்பட பின்னர் கண்காணிப்புக் குழுவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். மார்ச் 12 , 13 ஆகிய இரண்டு நாட்களில் ஆர்.ஜி.ஐ.சி.டி.க்கு வருமாறு அவரை கண்காணிப்புக் குழு கூறியுள்ளனர்.ஆனால் அவர் அதை கேட்காமல் தொடர்ந்து வீட்டிலேயே இருந்தார்.
மார்ச் 14 தேதி அவர் தனது காரில் மதியம் 2.30 மணிக்கு தனது மனைவியுடன் ஆர்ஜிஐசிடிக்குச் சென்றார். மார்ச் 15 ஆம் தேதி சிகிச்சைக்காக இரவு 9.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…