மகாராஷ்டிராவின் 89 வயது முன்னாள் முதல்வர் உடல்நல குறைவால் காலமானார்!
காங்கிரஸின் மூத்த தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் ஆகிய சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் புனேவில் காலமானார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஓராண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர் தான் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர். இவர் அண்மையில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின்பு அவர் குணமடைந்து தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்ததாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் 89 வயதான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் காலமாகியுள்ளார்.
இவரது மறைவுக்கு மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமாகிய சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் அவர்களின் மறைவு குறித்து தெரிந்து கொண்டேன். அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மகாராஷ்டிராவின் அரசியலில் உறுதியான தன்மை கொண்டவர் என இவரைப் புகழ்ந்து தனது அஞ்சலியையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.