இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்.. போர் விமானம் சாகசம் ..!
இந்திய விமானப் படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோன்றியது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமான படையின் 88-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு போர் விமானம் சாகச நிகழ்ச்சியை செய்தனர். அதில் , அப்பாச்சி மி -35 , ரபேல் விமானமும் கலந்து கொண்டது.
#WATCH: Flares fired by the Eklavya formation including Apache and Mi-35 attack helicopters at the Hindon Air Base in Ghaziabad.#AirForceDay2020 pic.twitter.com/ps70ymRp3X
— ANI UP (@ANINewsUP) October 8, 2020