மகாராஷ்டிராவில் சம்ருத்தி விரைவுச்சாலையில் நடந்த சாலை விபத்துகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நேற்று பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் கருகி உயிரிழந்தது உட்பட இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆறு வழிச்சாலை அகல அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட அந்த விரைவுச்சாலையில் ஏற்படும் விபத்துக்களுக்கு சாலை ஹிப்னாஸிஸ் ஒரு காரணம் என்று மாநில நெடுஞ்சாலை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் இருந்து நாக்பூர்-மும்பை விரைவுச் சாலையில் மொத்தம் 39 விபத்துகள் நடந்துள்ளன. மேலும், இந்த அதிவேக நெடுஞ்சாலையில் 616 சிறிய விபத்துகளும், பெரிய விபத்துகள் நடந்துள்ளன, இதில் 656 பேர் கடுமையான மற்றும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
அதிக வேகம், ஓட்டுநர்கள் உடல் அலுப்பு காரணமாக தூங்குவது மற்றும் டயர் வெடிப்பது போன்ற காரணங்களால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், சாலை ஹிப்னாஸிஸ் சிக்கலைச் சமாளிக்க நெடுஞ்சாலை காவல்துறை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா முழுவதும், 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் 15,224 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை புல்தானா மாவட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதியதில் அவர்கள் பயணித்த தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…