நாடு முழுவதும் 87 அரசியல் கட்சிகள் அதிரடி நீக்கம்! – இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து 87 கட்சிகள் அதிரடி நீக்கம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி நாட்டில், 2,796 பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசியல் கட்சிகள் நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன.
இதனால், தேர்தல்களில் போட்டியிடாத, முறையாக கணக்குகள் தாக்கல் செய்யாத கட்சிகளின் பெயர்களை நீக்கி நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, உரிய ஆய்வு நடத்திய தேர்தல் அதிகாரிகள், செயல்பாட்டில் இல்லாத கட்சிகளை கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்த செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகளை அதிரடியாக நீக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இந்த கட்சிகள் விதிமீறல் உள்ளிட்டவற்றை சரி செய்யாவிட்டால் தேர்தலில் சின்னம் பெறுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.