மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் 872 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் 86 பேர் இறந்துவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் இங்குள்ள மேற்கு ரயில்வே ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் து சிகிச்சை பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். இது ஏப்ரல் மாதத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதியாக அறிவிக்கப்பட்டது.
மொத்த கொரோனா தொற்றுகளில் 559 மத்திய ரயில்வேயிலும், 313 மேற்கு ரயில்வேவிலும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா காரணமாக இறந்த 86 நோயாளிகளில் 22 பேர் தற்போதுள்ள ரயில்வே ஊழியர்கள் மேலும் மத்திய ரயில்வேயில் 14 பேர் மற்றும் மேற்கு ரயில்வேயில் 8 பேர், மற்றவர்களில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 132 ரயில்வே ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்ட 700 உள்ளூர் ரயில் சேவைகள் இங்கு மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே ஆகிய இரண்டும் இயக்கப்படுகின்றன என தெரிவித்தனர்.
சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஜூன் 15 முதல் உள்ளூர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ரயில்வே ஊழியர்களிடையே கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துள்ளது என்று கூறினர்.
இந்நிலையில் அம்மாநிலங்களில் 15 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அலுவலகங்களுக்கு வருவதற்கு மாநில அரசு அனுமதித்தது. ஆனால் ரயில்வேயில் கிட்டத்தட்ட 100 சதவீத கள ஊழியர்கள் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து பணியாற்றி வருகின்றனர் என்று தேசிய ரயில்வே மஸ்டூர் யூனியன் தலைவர் வேணு நாயர் தெரிவித்தார்.
ரயில்வே பணியாளர்கள் மற்றும் பயணிகளிடையே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கவனம் செலுத்தி வருவதாக மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சிவாஜி சுதார் தெரிவித்தார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…