8500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி- மத்திய அரசு தகவல்…!!
2019ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் ரூ.700 கோடி செலவில் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இலவச வை-ஃபை வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி, டெல்லி, சென்னை உட்பட 215 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பினை அடுத்து, நடப்பாண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள 8,500 முக்கிய ரயில் நிலையங்களில் உலகிலேயே அதிவேக பப்ளிக் வைஃபை வசதியை அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.