சிறையில் 85 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி..!
அசாமின் நாகான் மாவட்ட சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 85 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பரில் அசாமின் நாகான் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறையில் மொத்தம் 85 கைதிகள் எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாகான் பிபி சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் எல் சி நாத் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியதாவது, எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் நாத் கூறினார்.
எச்.ஐ.வி தொற்றுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் போதைக்கு அடிமையானவர்கள். தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுக்க அவர்கள் ஒரே ஊசியைப் பயன்படுத்தினர். இதன் காரணமாக அவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அசாம் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (ASACS) 2002 முதல் ஜூன் 2021 வரை அசாமில் மொத்தம் 20085 HIV பாசிட்டிவ் கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் அனுராக் கோயல் கூறியிருந்தார்.
அதில், கம்ரூப் மாவட்டத்தில் 6,888 பேருக்கும், கச்சார் மாவட்டத்தில் 4609 பேருக்கும் மற்றும் திப்ருகர் மாவட்டத்தில் 1245 பேருக்கும் HIV இருந்துள்ளது.