இந்தியாவில் வோக்ஸ்வாகன்(VW) கார்களின் விற்பனை 85% அதிகம்.!
இந்தியாவில் வோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை கடந்த 2022இல் 85% சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வோக்ஸ்வாகனின் (VW) விற்பனை 85.48% அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் 1,01,270 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 54,598 வோக்ஸ்வேகன் கார்கள் விற்கப்பட்டிருந்தது.
இது 2022ஆம் ஆண்டில் 85% சதவீதம் அதிகரித்துள்ளது என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் அரோரா, தெரிவித்துள்ளார். வோக்ஸ்வேகன் நிறுவனத்தின், உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களுக்கு இந்தியா, ஒரு முக்கியமான சந்தையாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.