83 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் வசூலாகியுள்ளன..!
சுமார் 2 ஆயிரத்து 100 நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனில் 83 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடனை செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய ஐபிசி எனப்படும் திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததையடுத்து, நிறுவனத்தின் மீதான உரிமையையும் அதிகாரத்தையும் இழந்துவிடக்கூடிய அச்சத்தில் ஏராளமான நிறுவனங்கள் கடன்தொகையை செலுத்தி பைசல் பண்ண முன்வந்தன.
இதன்படி சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வாராக்கடன்கள் வசூலாகியுள்ளன.
90 நாட்களாக கடனை செலுத்தாவிட்டால் அந்த கணக்கு NPA என்றழைக்கப்படும் முடங்கிய கணக்காக கருதப்படும். இந்த சட்டத்திருத்தம் காரணமாக கடன் பெற்றவர்களிடம் சட்டரீதியான நெருக்குதல் அதிகரித்திருப்பதே கடன்களை திருப்பி செலுத்த முக்கிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.