ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம்.! ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ (Tejas Mark-1A) ஜெட் விமானங்களை ரூ.49,797 கோடி கொள்முதல் செய்ய கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அதை தயாரித்து வழங்க வேண்டிய (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) ஹெச்ஏஎல் நிறுவனம் ரூ.56,500 கோடி என குறிப்பிட்டு ஒப்பந்தத்தை கூறியது. இந்த விலை வேறுபாடு காரணமாக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பின்னர் ரூ.17,000 கோடி குறைக்கப்பட்டு, ரூ.39,000 கோடிக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வழங்குவது என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது உள்நாட்டு அளவில் போர் விமானங்கள் தொடர்பான மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

3 minutes ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

57 minutes ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

2 hours ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

2 hours ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

3 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

4 hours ago