83 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டன.! ரயில்வே துறை அமைச்சர் தகவல்.!
சென்ற 2022 நவம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் 83 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. – மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்.
குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், அரசு முன்னெடுத்து வரும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நாடாளுமன்றத்தில் கூறுகையில், சென்ற 2022 நவம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் 83 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. எனவும், விரைவில் அனைத்து டீசல் இன்ஜின்களையும், மின்சார இன்ஜின்களாக மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.