இடி, மழையால் 83 பேர் உயிரிழப்பு.! குடும்பத்திற்கு தலா ரூ .4 லட்சம் அறிவிப்பு.!
பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு , மூன்று நாள்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடியுடன் கூடிய மழை காரணமாக 83 பேர் உயிழந்தனர். இதைத்தொடர்ந்து, உயிர் இழந்த 83 குடும்பத்திற்கு தலா ரூ .4 லட்சம் என அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் உயிர் இழந்ததாகவும் , கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பீகாரில் இடியுடன் கூடிய மழையால் 22 பேர் உயிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
Bihar Chief Minister Nitish Kumar announces Rs 4 lakhs each for 83 people who lost their lives due to thunderstorms in the state. https://t.co/EtiX2gLgt7 pic.twitter.com/03hVtPtZYn
— ANI (@ANI) June 25, 2020