டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நாடு முழுவதும் கடந்த 60 நாட்களாக மேலாக அமலில் இருக்கும் 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இந்த உள்நாட்டு விமான சேவைக்கு பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழக அரசு 25 உள்நாட்டு விமானங்களை மட்டுமே தமிழகத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ள நிலையில், மும்பைக்கு தினந்தோறும் 50 விமானங்களை மட்டும் இயக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் அனுமதி அளிக்கவில்லை என்பதால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையத்தின் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அம்பன் புயல் பாதிப்பால் கொல்கத்தாவில் வரும் மே 28-ம் தேதி முதல் விமான நிலையச் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பீகார், பஞ்சாப், அசாம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் இன்று டெல்லியில் இருந்து இயக்கப்பட வேண்டிய மற்றும் டெல்லிக்கு வரவிருந்த மொத்தம் 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல் கடைசி சில நிமிடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் தங்களின் முக்கிய நிகழ்ச்சிகளை தவறவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…