பீகாரில் வெள்ளத்தால் 16 மாவட்டங்களில் 82. 92 லட்சம் பேர் பாதிப்பு..27 பேர் உயிரிழப்பு – பேரிடர் மேலாண்மை
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் 83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் மாநிலத்தில் தர்பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய இரு மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. கோபால்கஞ்ச் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பீகாரில் வெள்ள நிலைமை நேற்று கடுமையாக இருந்தது, கடந்த 24 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கூடுதலாக 1.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 82. 92 லட்சம் என்று பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 இறப்புகளில் தர்பங்கா மாவட்டத்தில் 11 பேரும், முசாபர்பூரில் ஆறு பேரும், மேற்கு சாம்பாரனில் நான்கு பேரும், சரண், சிவான் மற்றும் ககேரியாவில் தலா இரண்டு பேரும் பதிவாகியுள்ளனர். ஆறு நிவாரண மையங்களில் 5,000 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.