81 கோடி மக்களுக்கு  வரும் நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல் -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக

Default Image

ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுவதற்காக ,உணவு திட்டத்தை நவம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி  நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அவரது உரையில் , ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை .மேலும் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1  கிலோ பருப்பு  வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு 1.49 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், 81 கோடி மக்களுக்கு  வரும் நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்