ஹரியானாவின் யமுனா நகரில் நடைபெற்ற தசராவின் முக்கிய நிகழ்வான ராவண வதத்தில், 80அடி ராவணன் சிலை கீழே விழுந்து 6பேர் காயம்.
நவராத்திரியின் 9ஆம் நாள் திருவிழாவில் ராமர், ராவணனை வதைக்கும் தசரா எனும் நிகழ்வு நடைபெறுவது இந்து முறையில் வழக்கம். கொரோனா தொற்று காரணமாக 2 வருடமாக நடைபெறாமல் இருந்த இந்த தசரா இந்த வருடம் நடைபெற்றது. நேற்று நவராத்திரியின் இறுதி நாள், ஹரியானா மாநிலம் யமுனா நகரில் தசரா விழா நடைபெற்றது, இதில் 80 அடி ராவணன் சிலைக்கு ராமர், தீ வைத்து அழிப்பது போன்று தசரா விழா நிறைவு பெறும். . அப்படி நடைபெற்ற அந்த விழாவின் இறுதியில் எறியப்பட்டுக்கொண்டிருந்த ராவணன் சிலை கீழே சாய்ந்தது. அங்கே கூடியிருந்தவர்களில் சில பேரின் மேல் அந்த சிலை விழுந்தது. மக்களில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அங்குமிங்கும் கூச்சலிட்டுக்கொண்டே ஓடினர்.
போலீசார் வருவதற்கு முன் மைதானத்திலிருந்த பணியாளர்கள், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மக்களுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…