எச்.ஐ.வி தொற்று : திரிபுராவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களிடையே எய்ட்ஸ் நோய் தீவிரமடைந்துள்ளதாக வெளியான தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழப்பு என சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், அந்த செய்தி உண்மை தான் என அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை அனைத்துமே கடந்த 2007ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 828 மாணவர்கள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டு, பதிவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உள்ள மாணவர்களை கண்டறிந்துள்ளது. இது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் ஐந்திலிருந்து ஏழு புதிய எச்ஐவி தொற்று பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படி இத்தனை பேருக்கு எச்ஐவி தொற்று பரவியது என்று ஆய்வு செய்ததலில், 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 164 சுகாதார நிலையங்களின் மேற்கொள்ளபட்ட ஆய்வில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,674 என்றும், இவர்களில் ஆண்கள் 4,570 பேரும், பெண்கள் 1,103 பேரும் உள்ளனர்.
அந்த நோயாளிகளில் ஒருவர் மட்டும் திருநங்கை என்று அம்மாநில சுகாதாரத் இணை இயக்குநர் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மாணவர் பயன்படுத்திய ஒரே மருந்து ஊசியைப் பயன்படுத்துவதே எச்.ஐ.வி அதிகரிப்புக்கு காரணம் என்று கூறினார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…