திரிபுராவில் 800 மாணவர்களுக்கு HIV பாதிப்பு.. 47 பேர் உயிரிழப்பு.! காரணம் இதுதான்!!

Tripura AIDS

எச்.ஐ.வி தொற்று : திரிபுராவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களிடையே எய்ட்ஸ் நோய் தீவிரமடைந்துள்ளதாக வெளியான தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழப்பு என சமூக வலைதளங்களில் தவறாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், அந்த செய்தி உண்மை தான் என அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை அனைத்துமே கடந்த 2007ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 828 மாணவர்கள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டு, பதிவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உள்ள மாணவர்களை கண்டறிந்துள்ளது. இது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் ஐந்திலிருந்து ஏழு புதிய எச்ஐவி தொற்று பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படி இத்தனை பேருக்கு  எச்ஐவி தொற்று பரவியது என்று ஆய்வு செய்ததலில், 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 164 சுகாதார நிலையங்களின் மேற்கொள்ளபட்ட ஆய்வில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,674 என்றும், இவர்களில் ஆண்கள் 4,570 பேரும், பெண்கள் 1,103 பேரும் உள்ளனர்.

அந்த நோயாளிகளில் ஒருவர் மட்டும் திருநங்கை என்று அம்மாநில சுகாதாரத் இணை இயக்குநர் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மாணவர் பயன்படுத்திய ஒரே மருந்து ஊசியைப் பயன்படுத்துவதே எச்.ஐ.வி அதிகரிப்புக்கு காரணம் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்