ரயில் பெட்டிகளில் 146 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 80 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஏற்படும் படுக்கைகள் பற்றாகுறை பிரச்சனையை போக்க ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகிறது.
அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 4,000 ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயில் பெட்டிகளில் 146 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 80 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு படுக்கைகளுடன் கூடிய ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளில், நோயாளிகளின் வசதிக்கேற்ப பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…