கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. பின்னர், ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், ஆக்ஸ்பாம் இந்தியா நடத்திய புதிய ஐந்து மாநில கணக்கெடுப்பின்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களில் 80% க்கும் அதிகமானோர் ஊரடங்கு காலத்தில் கல்வி கிடைக்கவில்லை என்று கூறியதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
அதில், பீகாரில் 100% பெற்றோர்கள் இந்த கருத்துக்கு குரல் கொடுத்துள்ளனர். பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் 1,158 பெற்றோர் மற்றும் 488 ஆசிரியர்களிடையே இந்த ஆய்வு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டது.
இந்தியாவின் கிராமப்புற குடும்பங்களில் 15% பேருக்கு மட்டுமே இணைய வசதி உள்ளது மற்றும் அரசு தரவுகளின்படி, ஆதிவாசிகள் போன்றவர்கள் மத்தியில் இணைய வசதி எண்ணிக்கை மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பெற்றோர்களில் 80% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் இல்லை என்றும் அதனால் ஆன்லைன் வகுப்புகளில் சிக்கல் மேலும் அதிகரித்தது என கூறியுள்ளனர்.
ஜார்க்கண்டில், 40 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வியை அணுக சரியான சாதனங்கள் இல்லை என்று கூறினர். ஊரடங்கு போது கல்வி பெற்ற 20 சதவீத அரசு பள்ளி மாணவர்களில், 75 சதவீதம் பேர் வாட்ஸ்அப்பை நம்பியிருக்கிறார்கள், மீதம் உள்ளவர்கள் கல்விக்காக ஆசிரியர்களுடன் தொலைபேசி அழைப்புகளை நம்பியிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஐந்து அரசு பள்ளி ஆசிரியர்களில் இருவருக்கு ஆன்லைனில் கல்வியை வழங்க தேவையான சாதனங்கள் இல்லை என்று கணக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது. இந்த ஐந்து மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 80 சதவீத குழந்தைகள் அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களைப் பெறவில்லை, அதாவது பத்து மாணவர்களில் எட்டு பேர் எந்தவொரு பாடப்புத்தகங்கள் இல்லாமல் படிக்கத்தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…