இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!

இதுவரை இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 80 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கியமான சாதனைக்கு இந்திய தேசத்திற்கு வாழ்த்துக்கள் என்று மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், உலக வரலாற்றில் வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 கோடி தடுப்பூசி இலக்கை தொடுவதற்கு 85 நாட்களும், 20 கோடி தடுப்பூசியை அடைய மேலும் 45 நாட்களும், 30 கோடி தடுப்பூசியை அடைய 29 நாட்களும் எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு 30 கோடி டோஸ் தடுப்பூசியிலிருந்து 40 கோடியை அடைவதற்கு 24 நாட்கள் ஆகியுள்ளது. இதன் பின்னர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 50 கோடி தடுப்பூசியை அடைய மேலும் 20 நாட்கள் ஆகும் என்று அமைச்சகம் தெரிவித்தது. 60 கோடி இலக்கை கடக்க 19 நாட்கள் எடுத்துள்ளது, செப்டம்பர் 7 அன்று 60 கோடியிலிருந்து 70 கோடியை அடைய 13 நாட்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இதன் பின்னர் செப்டம்பர் 13 அன்று மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 75 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இன்று 80 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025