இந்தியாவில் இதுவரை 80.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்!
இந்தியாவில் இதுவரை 80.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 80.85 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த மதிப்பு எண்ணிக்கை 33,478,419 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 43,938 பேர் ஒரே நாளில் கொரோனவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்பொழுது 3,18,181 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.