80 வயதிலும் துப்பாக்கி சுட்டு அசத்தும் உ.பி மூதாட்டி
80 வயதிலும் உத்திர பிரதேசத்தில் ஒரு மூதாட்டி துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந்து வருகிறது. அந்த பெண்மணி பர்காஷி தோமர் என்பவர்தான். இவருக்கு 80 வயது ஆகிறது.
இதனை பொருட்டு அந்த மூதாட்டியிடம் பேட்டி கண்டபோது, தான் 60 வயது முதல் துப்பாக்கி சுடுவதாகவும். எங்கள் கிராமத்தில் வரதட்சணை கொடுமை கிடையாது. ஏனென்றால் தான் சுட்டுவிடுவதாக பயபடுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ‘என்னை யாரும் படிக்க வைக்க இல்லை. சின்ன வயதில் வீடுகளிலும் தோட்டங்களிலும் பணியாற்றினேன். எல்லோரும் ஓய்வு பெறும் வயதில் நான் எனக்கு பிடித்ததை செய்ய தொடங்கினேன். மேலும், எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த எண்ணினேன்.
நான் எனது பேரக்குழந்தைகளுடன் துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு அவர்கள் சுடுவதை கவனித்தேன். பிறகு என்னையும் அவர்கள் சுடச்சொன்னார்கள். நான் சரியாக இலக்குகளை சுட்டேன். அதனை பார்த்த பயிற்சியாளர் என்னால் சிறப்பாக சுட முடியும் என்றும் பயிற்சி எடுத்துக்கொள்ளும் படி கூறினார். தற்போது நான் பல போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய அளவில் பல பதக்கங்களை வாங்கி உள்ளேன்.’ என கூறினார்
source : dinasuvadu.com