8 வயது மகன் சரியாக படிக்காததால் குடிபோதையில் சூடு வைத்த தந்தை கைது!

தனது 8 வயது மகன் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்திற்காக குடிபோதையில் சூடு வைத்த கேரளாவை சேர்ந்த ஒரு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா எனும் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் என்பவருக்கு எட்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். தினமும் குடித்துவிட்டு வந்து அக்கறையில் அடிப்பது போல மகனை படிக்கவில்லை என தொடர்ச்சியாக அடித்து வந்த சிவகுமார், தற்போது கரண்டியை சுடவைத்து சிறுவனுக்கு கை மற்றும் கால் பகுதிகளில் சூடு வைத்துள்ளார். தந்தையின் கொடூர செயல் தாங்க முடியாமல் சிறுவன் அலறி அடிக்கவே, அருகிலிரந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர்.
அதன் பின் அங்கிருந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை அவரது தந்தையிடம் இருந்து மீட்டதுடன், அச்சிறுவனை பத்தனம்திட்டா குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் குடிபோதையில் மகனுக்கு சூடு வைத்த தந்தையை போலீசார் கைது செய்து காவல்துறையினரின் கண்காணிப்பில் வைத்துள்ளனர். படிக்கவில்லை எனும் காரணத்தை காட்டி சிறுவனை தனது போதைக்கு ஊறுகாயாக்கிய தந்தையின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025