கடந்த சில நாள்களுக்கு முன் பிரதமர் மோடி தான் சமூகவலைதள பக்கத்திலிருந்து வெளியேற சிந்திப்பதாக கூறினார். இதற்கு பலர் ஆதரவாகவும் , எதிராகவும் கருத்துகள் தெரிவித்தனர்.
பின்னர் இதற்கான காரணத்தை மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டார். அதில் “பெண்கள் தினமான மார்ச் 8-ம் தேதி எனது சமூகவலைதள கணக்குகள் அனைத்தையும் ஒருநாள் முழுவதும் நிர்வகிக்கப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.
வித்தியாசமான பெண்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட பெண்களின் வாழ்க்கையை குறித்து சமூக வளைதளங்களில் #sheinspiresUs என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிடுங்கள். அதிலிருந்து சிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பிரதமரின் சமூகவலைதள பக்கங்களில் தங்களின் வாழ்க்கைக் குறிப்பை அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அந்தப் பட்டியலில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் காலநிலை ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம்(8) சிறுமியும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்ற ஒருவரை உங்களுக்குத் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள் என மத்திய அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த லிசிபிரியா ” அன்புள்ள மோடி நீங்கள் என் குரலைக் கேட்கப்போவதில்லை என்றால் தயவுசெய்து என்னைக் கொண்டாட வேண்டாம். #SheInspiresUs முன்முயற்சியின் கீழ் நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நன்றாக யோசித்த பின்புதான் இந்த மரியாதையை நிராகரிக்க முடிவு செய்தேன்” என பதிவிட்டுள்ளார்.
லிசிபிரியா கடந்த ஆண்டு இவர் “அப்துல் கலாமின் குழந்தைகள்” விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…