கிணற்றிற்குள் விழுந்த 8 வயது குழந்தை…! வேடிக்கை பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…!

Published by
லீனா

கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.

மத்திய பிரதேச மாநிலத்தில்,  விடிஷாவில் நேற்று மாலை 8 வயது சிறுமி ஒருவர் கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்துள்ளார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், கிணற்றில் விழுந்த சிறுமியை பார்க்க கிணற்றை சுற்றி பெரிய கூட்டம் கூடியுள்ளது.

அந்த கிணற்றை சுற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி நின்று உள்ளது. இந்நிலையில் கிணற்றின் ஒரே சுவற்றில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்த போது அந்த சுவர் திடீரென சரிந்தது. இதனால் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. 40 அடி ஆழமுள்ள கிணற்றில்  ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றவர்களை மீட்பதற்காகவும் மீட்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரை மூன்று பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

5 நாட்களுக்குப் பின் நாளை முதல் ஊட்டி மலைரயில் சேவை தொடக்கம்!

5 நாட்களுக்குப் பின் நாளை முதல் ஊட்டி மலைரயில் சேவை தொடக்கம்!

நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…

3 hours ago

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு… 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…

4 hours ago

நாளை 13 மாவட்டங்களில் கனமழை – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

5 hours ago

டெங்குவால் 8 பேர் உயிரிழப்பு.. காய்ச்சல் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அறிக்கை.!

சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…

5 hours ago

“அந்த 5 பேரை ஏலத்தில் எடுக்க”…பெங்களூரு அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…

6 hours ago

கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்? நாளை முடிவு!

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…

7 hours ago