கிணற்றிற்குள் விழுந்த 8 வயது குழந்தை…! வேடிக்கை பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…!
கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.
மத்திய பிரதேச மாநிலத்தில், விடிஷாவில் நேற்று மாலை 8 வயது சிறுமி ஒருவர் கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்துள்ளார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், கிணற்றில் விழுந்த சிறுமியை பார்க்க கிணற்றை சுற்றி பெரிய கூட்டம் கூடியுள்ளது.
அந்த கிணற்றை சுற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி நின்று உள்ளது. இந்நிலையில் கிணற்றின் ஒரே சுவற்றில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்த போது அந்த சுவர் திடீரென சரிந்தது. இதனால் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றவர்களை மீட்பதற்காகவும் மீட்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரை மூன்று பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.