கர்நாடக அமைச்சரவையில் 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்!
கர்நாடகாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் பதவி ஏற்பு விழாவில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் பதவி ஏற்றனர். இருவருக்கும் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன்பின், கர்நாடக அமைச்சரவையில் 8 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கும் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, கர்நாடக கேபினட் அமைச்சர்களாக, ஜி.பரமேஸ்வரா, கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
மேலும், சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி மற்றும் ஜமீர் அகமது கான் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பதிவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, முதலமைச்சர் சித்தராமையா அடுத்தடுத்து உரையாற்றி வருகின்றனர்.