சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் (STF) – நக்சலைட்டுகளுக்கும் நேற்று தொடங்கிய தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர்-பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் (STF) நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று முதல் அப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் (STF), நக்சலைட்டுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மொத்தம் 8 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பகுதியில் இருந்து பல்வேறு ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மாவட்ட எஸ்,பி தண்டேவாடா கவுரவ் ராய் ANI செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் தேதி பாதுகாப்பு படையினர் (STF) ரோந்து பணியில் ஈடுபட்டு நேற்று (வியாழன்) திரும்பி கொண்டு வந்து கொண்டு இருக்கையில், நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்த தொடங்கியதாகவும் அதன் பிறகு STF பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் போலீஸ் அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…