ஆந்திராவில் அடுத்தடுத்த சாலை விபத்தில் சிக்கி 8 பேர் பலி.!

ஆந்திரா : திருப்பதி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் ஆகிய இரு இடங்களில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் எம்.கொங்கரவாரிப்பள்ளி என்ற இடத்தில், பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் திருப்பதிக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலத்தில் மற்றொரு அசம்பாவித சம்பவத்தில், கொடுருபாடு ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகே லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும், மல்லாவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்புறத்தில் உள்ள டிவைடரில் மோதியது. வாகனம் தீப்பிடித்து எரிந்தது, ஆனால் அதிஷ்டவசமாக உள்ளே இருந்த இரு பயணிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025