சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

bus fire - Haryana

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற அந்த சுற்றுலாப் பேருந்தில் மொத்தம் 64 பேர் பயணித்துள்ளனர்.

தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பஞ்சாபில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் மதுரா-பிருந்தாவனம் மற்றும் பிற கோவில்களுக்கு சென்றுவிட்டு. நேற்று (மே 17ம் தேதி) இரவு தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்த விபத்து நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்