உ.பியில் லாரி – பேருந்து மோதி 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்.. நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேசத்தில் லாரி – பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம்.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தானது சாரதா ஆற்றின் பாலத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தௌர்ஹாராவிலிருந்து லக்கிம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. காலை 7:30 மணியளவில், பஹ்ரைச் நோக்கிச் சென்ற பேருந்தும், லாரியும் ஈசா நகர் காவல் நிலையம் அருகே உள்ள பாலத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உ.பி., லக்கிம்பூர் கேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு PMNRF-லிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
Distressed by the accident in Lakhimpur Kheri, UP. Condolences to the bereaved families. May the injured recover quickly. Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 28, 2022