அரை கிலோ மீட்டருக்கு 8 அடி உயர சுவர்.! ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அழகுபடுத்தும் பிரதமர் மோடி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். இவரை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது ட்ரம்ப்  மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களை சுற்றிப்பார்க்கின்றனர். மேலும் வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே, அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது. அந்தவழியில் உள்ள குடிசை பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு தற்போது சமூகவலை தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் இதுபோல் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் மட்டும் சுவர்கள் எழுப்பப்பட்டு, இந்தியாவின் வறுமையை ஒழித்துவிடுகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி ஆணையம், குடிசை பகுதிகளை மறைக்க வேண்டிய எண்ணத்தில் சுவர் எழுப்பப்படவில்லை என்றும், ஏற்கனவே பழுதான சுவருக்கு பதிலாக புதிய சுவர் கட்டப்படுகிறது. மேலும் சுவரின் உயரம் 4 அடிக்கு மேல் இருக்காது, இதனால் குடிசைப்பகுதி மறைந்துவிடாது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

10 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

39 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

1 hour ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

1 hour ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

1 hour ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

2 hours ago