இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது, இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இது இந்திய அரசுக்கும், முன்னாள் வீரர்களின் குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கும் அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
அதாவது, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மத்திய அரசு இந்தியர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து 8 பேரை விடுதலை செய்தது. அதன்படி, விடுதலை செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர். ஒருவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அவரும் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8 இந்தியர்களும் தஹ்ரா குளோபல் என்ற நிறுவனத்துக்காக கத்தாரில் தங்கி பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…